

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா தோல்வி
அரையிறுதிச் சுற்றில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி பரிதாப தோல்வி
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஹாங்காங்கில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டன் ஆண்டர்சன் ஆகியோர் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய டென்மார்க் வீரர் 21-க்கு 13, 21-க்கு 13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கெனவே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது.