நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர்

மகளிர் ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இறுதிப்போட்டியில் சீனாவை 3-1 என வீழ்த்தி அபார வெற்றி
ஹாக்கி தொடர்
ஹாக்கி தொடர்
Published on: 

மகளிர் ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 4-வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொண்ட இந்திய முதல் பாதியில் 0-க்கு 1 என பின்தங்கிய நிலையில், 2-வது பாதியில் சிறப்பாக செயல்பட்டு 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.