தோனி தலைமையின் கீழ் விளையாடாதது வருத்தமே

இந்திய அணியிலோ அல்லது ஐபிஎல் போட்டிகளிலோ விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது வாழ்நாள் முழுவதும் வருத்தமான ஒன்றாக நினைப்பதாக அவர் கூறினார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்
Published on: 

தோனி தலைமையின் கீழ் விளையாடாதது வருத்தமே

முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது குறித்து சூர்யகுமார் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார். தோனி தலைமையின் கீழ் இந்திய அணியிலோ அல்லது ஐபிஎல் போட்டிகளிலோ விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது வாழ்நாள் முழுவதும் வருத்தமான ஒன்றாக நினைப்பதாக அவர் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி - நீரஜ் சோப்ரா விலகல்

பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவு கடினமானதாக இருந்தாலும் விரைவில் மீண்டு வரவேண்டும் என நினைப்பதாகவும் நீரஜ் சோப்ரா பதிவிட்டுள்ளார்.

நமீபியாவில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர்

நமீபியாவில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில், தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. 145 என்ற வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்கா 13.4 ஓவர்களில் எட்டியது.

டெவால்ட் பிரேவிஸ் 32 பந்துகளில் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

newstamil.tv