

இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் லக்ஷ்யா சென், ஜப்பான் மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதியில் இந்தோனேசிய வீரர் அல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3 சுற்றுகள் வரை நீண்ட பரபரப்பான இந்த போட்டியில், 21-12, 15-21, 21-11 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம், ஹைலோ ஓபன் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து, நடப்பு மாதத்தில் அடுத்தடுத்து 2 BWF வேர்ல்ட் டூர் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறி அவர் அசத்தியுள்ளார்.