

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தமது முதல் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் போராட்ட குணத்தை நினைவு கூர்ந்தார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் பாலமாக கிரிக்கெட் செயல்பட முடியும் என்றவர், கிரிக்கெட்டைப் போல ஹாக்கி விளையாட்டிற்கும் நிதி ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.