

பாகிஸ்தான் டி20 மற்றும் ஒடிஐ அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
50 வயதான இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார்.
அத்துடன் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஆகிப் ஜாவேத்துக்கு பதிலாக தற்போது மைக் ஹேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.