19
விளையாட்டு
வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் புதிய ஸ்டாண்டு.. அஜித் வடேகர், சரத் பவார் பெயரிலும் புதிய ஸ்டாண்டுகள் திறப்பு
மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் புதிய ஸ்டாண்டு திறக்கப்பட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் புதிய ஸ்டாண்டு திறக்கப்பட்டது.
இந்த மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறப்பு விழா நடைபெற்றது. அதில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா பெற்றோர், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும், அஜித் வடேகர், சரத் பவார் பெயரிலும் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன. கிரிக்கெட்டில் இவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.

