

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி, சீனாவை 6-க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா, இந்த தொடர் வரலாற்றில் சீனாவுக்கு எதிராக தனது மிகப்பெரிய வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சீனாவை 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதே இந்தியாவின் சிறந்த வெற்றியாக இருந்தது.