

ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 232 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான், நாளை இலங்கை அணியுடன் மோதுகிறது.