

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.
கமிந்து மெண்டிஸ் 131 ரன்கள் குவித்தார். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி 48.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பகர் ஜமான் 127 ரன்கள் விளாசினார்.