

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதன் மூலம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 2-வது முறை பதவியேற்க முயற்சி செய்து வரும் அவருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் டிசம்பர் 3-ம் தேதியும், வாக்குப்பதிவு டிசம்பர் 5-ம் தேதியும் நடைபெற உள்ளன.