

சென்னை ஓபன் டென்னிஸ் - போலந்து வீராங்கனை சாம்பியன்
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 7-5, 6-1, 6-4 என வெற்றி
இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
சென்னை ஒபன் டென்னிஸ் போட்டியில் போலந்து நாட்டை சேர்ந்த மாக்டா லினெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெறவிருந்த நிலையில், காற்று மாசு காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், நேற்று காலை 11 மணிக்கு போட்டி நடைபெற்றதில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜானிஸ் ஜென்னும், போலந்தின் மாக்டா லின்டாவும் மோதினர். இதில், 7-க்கு 5, 6-க்கு 1, 6-க்கு 4 என லினெட் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.