Surya kumar yadhav
விளையாட்டு
புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை..!
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள சூர்யகுமார்யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள சூர்யகுமார்யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்து, நடப்பு ஐ.பி.எல்.
தொடரில் இதுவரை 640 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
மும்பை அணியில் ஒரு சீசனில் சச்சின் அடித்த 618 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

