ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கிய சூரியவன்ஷி

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா A அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
சூரியவன்ஷி
சூரியவன்ஷி
Published on: 

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, அதிவேக இரட்டை சதம் உள்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

அவர், 53 பந்துகளில் 28 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 204 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டை சதம் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளார்.