"சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் மிக கடினமாக இருக்கும்"

நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் பேட்டி "சூர்யவன்ஷியிடம் எப்போதும் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்ப்பர்"
சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி
Published on: 

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் மிகவும் கடினமாக இருக்கப் போவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமை வாய்ந்த வீரர் எனவும், அவர் மீது மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரசிகர்கள் எப்போதும் அவரிடமிருந்து அதிரடியான ஆட்டத்தை எதிர்பார்ப்பார்கள் எனவும், அது எல்லா முறையும் நடக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.