VLP Angalamman
விளையாட்டு
அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அங்காளம்மன் கோவிலில் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மன் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேள, தாளங்கள் முழங்க கோயில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடியபோது திரளான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

