சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் சுவிஸ் ஜோடி சாம்பியன்

இந்திய ஜோடியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து ஜோடி வெற்றி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி தோல்வி
Minister aadhav
Minister aadhav
Published on: 
Summary

சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் சுவிஸ் ஜோடி சாம்பியன் இந்திய ஜோடியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து ஜோடி வெற்றி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

சுவிட்சர்லாந்து ஜோடி
சுவிட்சர்லாந்து ஜோடி

மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், ருதுஜா போசலே ஜோடி, சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ மற்றும் சிமோனா வால்டர்ட் ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

இதில் சுவிட்சர்லாந்தின் ஜோடி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சாம்பியன்
சாம்பியன்

இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற போதிலும், டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி வைஷ்ணவி - ருதுஜா ஆகும்.

முதல்முறையாக டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளனர்.

இந்திய வீராங்கனைகள்
இந்திய வீராங்கனைகள்

சென்னைதான் இந்தியாவின் டென்னிஸ் தலைநகரம். இவர்கள் இறுதிப் போட்டி வரை வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த வீராங்கனைகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

வைஷ்ணவி,ருதுஜா
வைஷ்ணவி,ருதுஜா

ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், சென்னையில் நடைபெறும் கடைசிப் போட்டி இதுதான். மீண்டும் இதுபோன்ற போட்டிகளை நடத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆட்சி விளையாட்டுத் துறைக்கு மிகுந்த கவனமும் ஆர்வமும் செலுத்தி வருகிறது. அதில் டென்னிஸ் ஒரு முக்கியமான விளையாட்டு. சென்னைக்கு முக்கியமான ஒரு டென்னிஸ் போட்டியை கண்டிப்பாகக் கொண்டு வருவோம்.

Q

இந்திய மாநில உறவுகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

A

இந்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறுவது தவறானது.

Q

குழு ரத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

A

இந்தக் குழு ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க மாட்டார்களா, கவனம் செலுத்த மாட்டார்களா என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு. ஒரு குழுவை ரத்து செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

Q

அகில இந்திய காங்கிரஸில் 30 பேர் நீக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு

A

அது தமிழ்நாட்டில் நடக்கவில்லை. வேறு ஒரு மாநிலத்தில் நடந்தது. அது அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குள் எடுக்கப்பட்ட முடிவு. அதுகுறித்து எனக்கு எந்த விளக்கமும் தெரியாது.

Q

பெரியார் அறிவுலகத்தில் ஊழல் தொடர்பாக கேள்விக்கு

A

அமைச்சர் ராஜ்மோகன் அது குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார். இதை யார் செய்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Q

இது ஏ.ஐ. மூலம் நடந்ததா என்று கேள்விக்கு

A

இது ஏ.ஐ. மூலம் மட்டுமே நடந்தது என்று கூற முடியாது. ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன.

புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தது தி.மு.க. ஆட்சியில்தான். இதை யார் செய்தார்கள் என்பதைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Minister aadhav
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: அல்காரஸ் சாம்பியன்