ரஞ்சி கோப்பை தொடரில் வலுவான நிலையில் தமிழ்நாடு அணி

சண்டிகருக்கு எதிராக முதல் நாள் முடிவில் 320 ரன்கள் குவிப்பு தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்கள் குவித்து அசத்தல்
பிரதோஷ் ரஞ்சன்
பிரதோஷ் ரஞ்சன்
Published on: 
Summary

ரஞ்சி கோப்பை தொடரில் வலுவான நிலையில் தமிழ்நாடு அணி சண்டிகருக்கு எதிராக முதல் நாள் முடிவில் 320 ரன்கள் குவிப்புதமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்கள் குவித்து அசத்தல்

ரஞ்சி கோப்பை தொடரில் சண்டிகருக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 320 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

பாபா இந்திரஜித்.
பாபா இந்திரஜித்.

டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் சதம் அடித்து அசத்தினார். பாபா இந்திரஜித் 51 ரன்கள் எடுத்தார்.

முதல் நாள் ஆட்டம் முடிவில் தமிழ்நாடு அணி 86 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்துள்ளது.

பிரதோஷ் ரஞ்சன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு

பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்களுடனும், குருசாமி அஜிதேஷ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.