

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பீகார் அணி, தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.