

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 330/4
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஷ் இங்கிலீஷ் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மார்கஸ் அகர்மென் 95 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.