

ஆசிய கோப்பைக்கான போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி என்ன சாதிக்க போகிறீர்கள்? என்று இந்திய அணிக்கு முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு மனித உயிரின் மதிப்பு, விளையாட்டை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தவர், தாம் இந்த போட்டியை பார்க்கவே மாட்டேன் என்றும், அதில் எந்த கேள்வியும் இல்லை எனவும் கூறியுள்ளார்.