

ஆசிய இளையோர் தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நெல்லையை சேர்ந்த மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பஹ்ரைனில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெல்லையை சேர்ந்த எட்வினா ஜேசன் வெள்ளிப்பதக்கம் வென்றார். சென்னையிலிருந்து நெல்லைக்கு ரயிலில் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.