

IPL போட்டிகளில் இருந்தும் கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், எப்போதும் நீங்கள்தான் எங்கள் தல என நடிகர் கார்த்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விளையாட்டில் மட்டுமின்றி, பணிவு, கண்ணியம் மற்றும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தோனி நடந்துகொண்ட விதம் ஒரு தலைமுறைக்கே உத்வேகமாக திகழ்ந்ததாக புகழ்ந்துள்ளார்.
மேலும், தோனியின் பயணம் எங்கு சென்றாலும் தனது அன்பும், வாழ்த்துகளும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.