CM Vijay

தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ் தங்கப்பதக்கம் வென்றார்

அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர் அறிவிப்பு
Published on: 
Summary

தங்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து, பாராட்டு

முதலமைச்சர் விஜய் வாழ்த்து, பாராட்டு

சோலைராஜ் தர்மராஜ்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

முதலமைச்சர் விஜய்

திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!

CM Vijay
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்
newstamil.tv