

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. போபாலில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில், முதல் 2 லீக் போட்டியிலும் மலேசியா, தென் கொரியாவை இந்திய அணி வென்றது.
தொடர்ந்து நடைபெற்ற தாய்லாந்துக்கு எதிரான 3-வது போட்டியில், இந்திய அணி 7-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறி, அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.