1
1

11 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.. பழனி, திருச்செங்கோடு உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்வு

பழனி, திருச்செங்கோடு உள்பட 11 நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்திருந்தார்.
Published on: 

அதன்படி திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் தேர்வு நிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

newstamil.tv