

தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்களில் இரண்டாவது வெற்றி முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. ரூ.58,214 கோடி முதலீட்டில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு என தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.
15 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
இந்த மாநாட்டில், ரூ.7,925 கோடி முதலீட்டில் 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். ரூ.1,430 கோடி முதலீட்டில் 6 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்ததன் மூலம் 1,710 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் ரூ.2,000 கோடி முதலீடு
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தருமபுரியில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை பிரேசில் நாட்டைச் சேர்ந்த WEG நிறுவனம் அமைக்க உள்ளது.
சிவகங்கை, கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் டைட்டன் நிறுவனமும், சிவகங்கையில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் JK Fenner நிறுவனமும் புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டது.
போஸ்கோ நிறுவனம் கிருஷ்ணகிரியில் 250 கோடி ரூபாய் முதலீட்டில் எஃகு பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் TVS Motor Company, JM Baxi Ports & Logistics, CSE Development India, Avigna, Sanmar Group, SCM Garments நிறுவனங்களும் முதலீடு செய்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருவள்ளூர், கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
டி.வி.எஸ். அல்ட்ரா வயலெட் அதிநவீன பைக்கை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், இருசக்கர வாகனத்தின் செயல்பாட்டை கேட்டறிந்து வியப்படைந்தார்.
மேலும் வீடியோவை காணலாம்