’அகல்விளக்கு பதிப்பகத்தின் அனைத்து ஆர்டர்களும் ரத்து’

கன்னிமாரா நூலகத்திலும் புத்தகம் எழுதியதாக கூறப்படும் நிவேதா பால்ராஜ், நிவேதா அன்பழகன் பெயரிலும் நூல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியவர், ஸ்காட்லாந்து போலீசாரால் கூட அந்த எழுத்தாளர்களை கண்டுபிடிக்க முடியாது என அமைச்சர் ராஜ்மோகன் கிண்டலடித்து உள்ளார்.
கன்னிமாரா நூலகம்
அமைச்சர் ராஜ்மோகன்நியூஸ்தமிழ்24x7
Published on: 

நூலக புத்தக கொள்முதல் ஊழல் விவகாரத்தில் ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்தி, உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன்
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைநியூஸ்தமிழ்24x7

கன்னிமாரா நூலகத்தில் அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ராஜ்மோகன், எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில், புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு எழுந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள புத்தகங்கள் போல வேறு நூலகங்களில் வாங்கப்பட்டுள்ளதா? என்ற ஆய்வும் நீடிக்கிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை எழும்பூரில் கன்னிமாரா நூலகத்தை ஆய்வு செய்தபோது கூறியதாவது;

பிரபல ஆய்வாளர் ஜான் ட்ரேஸ் பெயரில் போலியாக புத்தகம் எழுதியதாகவும் அந்த புத்தகம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நிவேதா பால்ராஜ் பெயரில் பல தலைப்புகளில் பல நூல்கள் வந்துள்ளன. கமலாம்பாள் கருணாநிதி, பவுனாம்பாள் கருணாநிதி உள்ளிட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. போலி புத்தகங்கள் பல நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் குற்றச்சாட்டு நியூஸ்தமிழ்24x7

கன்னிமாரா நூலகத்தில்...

கன்னிமாரா நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பக 523 நூல்கள் இடம் பெற்றுள்ளது. திமுக ஆட்சி காலத்திலே வாங்கப்பட்ட புத்தகங்கள் இவை. அனைத்து நூலகங்களிலும அகல்விளக்கு பதிப்பக அனைத்து புத்தகங்களையும் எடுத்து ’சீல்’ வைக்க உத்தரவிட்டுள்ளோம். அவர்களுக்கு கொடுத்த அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்கிறோம்.

லஞ்ச ஒழிப்புத்துறை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

கன்னிமாரா நூலகம்
’ரத்து, இனி தப்பிக்கவே முடியாது’