கேரளாவுக்கு கடத்தப்படும் கால்நடைகள் - செய்தியாளரை மிரட்டிய டிஎஸ்பி

கேரளாவுக்கு சேலம் வழியாக கால்நடைகள் கடத்தப்படுவது, கிருஷ்ணகிரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் நியூஸ் தமிழ் நடத்திய கள ஆய்வில் அம்பலமாகி உள்ளது. ஆவணங்கள் இல்லாமலும், காலாவதியான ஆவணங்களுடனும் மாடுகளை கேரளாவுக்கு ஏற்றி சென்றது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
கடத்தல் சம்பவம்
டிஎஸ்பி மிரட்டல்நியூஸ்தமிழ்24x7
Published on: 

கால்நடைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை மடக்கி பிடித்து மேச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நியூஸ் தமிழ் செய்தியாளர் குழு. நியூஸ் தமிழ் செய்தியாளர் குழு மடக்கி பிடித்த கால்நடைகள் கடத்தல் லாரிகளை எவ்வித விசாரணையும் இன்றி மேச்சேரி போலீசார் விடுவித்தனர். செய்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்வேன் என டிஎஸ்பி சண்முகசுந்தரம் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

கிருஷ்ணகிரி
கால்நடைகள் கடத்தல்நியூஸ்தமிழ்24x7

கேரளாவுக்கு கால்நடைகள் கடத்தலின் பின்னணியில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாகனத்திற்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் என புகார் எழுந்துள்ளது.

டிஎஸ்பி பகிரங்க மிரட்டல்

செய்தியாளர் குழு மடக்கி பிடித்த லாரிகளை எந்த விசாரணையும் இன்றி மேச்சேரி போலீசார் விடுவித்த நிலையில், "உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்" என்றும், “உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன்” என்றும் செய்தியாளர் குழுவை பகிரங்கமாக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மிரட்டினார்.

செய்திக்குழு
டிஎஸ்பி மிரட்டல்நியூஸ்தமிழ்24x7

பின்னணியில் ராக்கெட் ராஜா?

சட்டவிரோதக் கால்நடை கடத்தலின் பின்னணியில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாகனத்திற்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் என புகார் எழுந்துள்ளது.

2 லாரிகளை மடக்கி பிடித்து மேச்சேரி காவல்நிலையத்தில் செய்தியாளர் குழு ஒப்படைத்த நிலையில், லாரிகளை எந்த விசாரணையும் இன்றி மேச்சேரி போலீசார் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னணி
ராக்கெட்ராஜா?நியூஸ்தமிழ்24x7

வீடியோவைக் காண...

கடத்தல் சம்பவம்
"கடத்தல் லாரியை பிடிப்பது உங்கள் வேலையா?" செய்தியாளரை மிரட்டிய DSP