

நெல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 27 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் உள்ள சில மாவட்ட ஆட்சியர்கள், தனியார் நெல்கொள்முதல் நிலையங்களை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார், மேலும், 500 கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளதாகவும், அதனை அரசு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.