தொகுதி மறுவரையறை நிலைப்பாடு மாறாது - திமுக திட்டவட்டம்

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
தொகுதி மறுவரையறை நிலைப்பாடு மாறாது - திமுக திட்டவட்டம்
Published on: 

தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைப்பாட்டை முதுகு குத்திகளின் முணுமுணுப்பு எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது, பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் உணர வேண்டும் என்றும் காங்கிரசாருக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

முதல் முதலில் குரல் எழுப்பியது திமுக

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்.

நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில் தான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%ல் இருந்து குறையக் கூடாது

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது.

நிலைப்பாட்டில் மாற்றமில்லை

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகு குத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.

மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர்...

பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

வீடியோவைக் காணலாம்

தொகுதி மறுவரையறை நிலைப்பாடு மாறாது - திமுக திட்டவட்டம்
தொகுதி மறுசீரமைப்பு - அறிவித்தார் மு.க.ஸ்டாலின்