100வது வயதை எட்டிய முன்னாள் அமைச்சர்களுக்கு கௌரவம் - முதல்வர் நெகிழ்ச்சி

100வது வயதை எட்டியுள்ள முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், எச்.வி.ஹண்டே ஆகியோரை முதலமைச்சர் விஜய் கௌரவித்துள்ளார்.
100வது வயதை எட்டிய முன்னாள் அமைச்சர்களுக்கு கௌரவம் - முதல்வர் நெகிழ்ச்சி
Published on: 

சட்டமன்ற ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில், சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், எமஜிஆர் கையொப்பமிட்ட 100 ரூபாய் நோட்டினை முதலமைச்சருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.

எம்ஜிஆர் கையொப்பமிட்ட ரூ.100
எம்ஜிஆர் கையொப்பமிட்ட ரூ.100

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இருவருக்கும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் விஜய் சிறப்பித்தார்.

தமிழ்நாட்டிற்கு தங்கப்பதக்கம்

தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.

அப்போது, டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 45ஆவது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026ல், “வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் விருதினைக் காண்பித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.