உதயநிதியின் வீடியோக்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. தொடர்பாக உதயநிதியின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி அனுமதித்துள்ளார்.
உதயநிதியின் வீடியோக்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on: 

தமிழக அரசு முறையீடு

மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகை, ஊடகங்களுக்கு தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரசு வழக்கறிஞர் புகார்

இந்த நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்து உள்ளதாகவும், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வருவதாக புகார் தெரிவித்து முறையிட்டார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அதுதொடர்பான வீடியோக்களில் தவறான கருத்து அல்லது வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை பாதிக்கும் வகையில் இருந்தால் சமூக வலைதளங்களில் இருந்து அவற்றை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, இந்த வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால், சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

வீடியோவைக் காணலாம்

உதயநிதியின் வீடியோக்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உதயநிதிக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு