நவீன மிதிவண்டி, ஹெல்மெட் - அரசுக்கு ரூ.116.12 கோடி மிச்சம்

2026-27ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதியானது டெண்டர்
விலையில்லா மிதிவண்டி நியூஸ்தமிழ்24x7
Published on: 

இது, கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட சாதாரண சைக்கிளின் விலையை விடக் குறைவு என்பதோடு, அரசுக்கும் 116 கோடியே 12 லட்சம் ரூபாய் மிச்சமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு
ஹீரோ சைக்கிள்நியூஸ்தமிழ்24x7

மாணவர்களுக்கான மிதிவண்டி

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 - 2027ம் ஆண்டுக்கான மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய தவெக அரசு திட்டமிட்டது.

ஆனால், வழக்கமான சாதாரண மிதிவண்டிகள் அல்லாமல் இந்த முறை நவீன மிதிவண்டிகளும், அதோடு தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் சேர்த்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

ஹீரோ சைக்கிள் தேர்வு

இதற்காக 276 கோடியே 55 லட்சம் ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதில், ஹீரோ சைக்கிள்ஸ், எஸ்.கே.பைக்ஸ் மற்றும் அவான் சைக்கிள்ஸ் ஆகிய 3 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றதில் லூதியானாவை சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த நிறுவனம் முதலில் குறிப்பிட்டிருந்த விலையின் அடிப்படையில் கணக்கிட்டால், மொத்த கொள்முதல் செலவு 392 கோடியே 32 லட்சம் ரூபாயாக இருந்தது.

இறுதியான டெண்டர்
அரசாணை வெளியீடுநியூஸ்தமிழ்24x7

ரூ.116.12 கோடி செலவு மிச்சம்

அதாவது, அரசு அனுமதி வழங்கிய 276 கோடியே 55 லட்சம் ரூபாயை விட 115 கோடியே 77 லட்சம் ரூபாய் கூடுதலாக இருந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துடன் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 276 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு நவீன மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 116 கோடியே 12 லட்சம் ரூபாய் மிச்சமாகி உள்ளது.

திமுக அரசு கொள்முதல் செய்ததை விட குறைவு

இதில் ஹைலைட் என்னவென்றால், 2025 - 2026ம் கல்வியாண்டில் தலைக்கவசம், தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெறும் சாதாரண மிதிவண்டிகளுக்கு மட்டுமே திமுக அரசு கொள்முதல் செய்த அடிப்படை விலையைவிட இது குறைவு என்பதுதான்.

அதாவது, மாணவர்களுக்கான சாதாரண மிதிவண்டியை திமுக அரசு 4 ஆயிரத்து 375 ரூபாய்க்கும், மாணவிகளுக்கான சாதாரண மிதிவண்டியை 4 ஆயிரத்து 250 ரூபாய்க்கும் கொள்முதல் செய்திருந்தது.

மிதிவண்டி திட்டம்
இறுதியானது டெண்டர்நியூஸ்தமிழ்24x7

கொள்முதல் ஆணை

ஆனால், நடப்பு ஆண்டுக்கு தலைக்கவசம், தண்ணீர் பாட்டிலுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நவீன மிதிவண்டிகளை தவெக அரசு முறையே 4 ஆயிரத்து 369 ரூபாய்க்கும், 4 ஆயிரத்து 245 ரூபாய் 30 காசுகளுக்கும் கொள்முதல் செய்துள்ளது.

இதையடுத்து, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு ஏற்புக் கடிதம் மற்றும் கொள்முதல் ஆணைகளை வழங்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மற்றும் கொள்முதல் குழுத் தலைவருக்கு அதிகாரம் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீடியோவைக் காண...

இறுதியானது டெண்டர்
'ஹீரோ'வை தேர்வு செய்தார் முதல்வர் விஜய்