6
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்.. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிப்பதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2026-இல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொது சின்னம் கோரி சட்டமன்றத்தின் பதவி காலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்தே விண்ணப்பிக்கலாம்.
அதன்படி வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் பொது சின்னம் கோரி விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.