18, 19ஆம் தேதிகளில் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை கணிப்பு

வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18. 19ஆம் தேதிகளில்...
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்நியூஸ்தமிழ்24x7
Published on: 

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது;

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை 16ஆம் தேதி 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.

வானிலை கணிப்பு
சென்னைக்குநியூஸ்தமிழ்24x7

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் 17ஆம்தேதி மாலை தீவிர புயலாக நிலவக்கூடும்.

நவம்பர் 20ஆம் தேதி

இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக, கரை கடக்க வாய்ப்புள்ளது.

அப்போது மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளக் கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

ஆரஞ்ச் அலர்ட்
19ஆம் தேதி நியூஸ்தமிழ்24x7

16, 17ஆம் தேதிகளில்...

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18, 19ஆம் தேதிகளில்...

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வானிலை கணிப்பு
வானிலை தகவல் நியூஸ்தமிழ்24x7

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை கணிப்பு
வானிலை தகவல்நியூஸ்தமிழ்24x7

வீடியோவைக் காண...

18. 19ஆம் தேதிகளில்...
ஆக்ரோஷம் காட்டும் புயல் - சென்னைக்கு வைத்த Check