54
54

"ஆவினில் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்" பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் தெரிவித்தார்.
Published on: 

ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் தெரிவித்தார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத் துறை அலுவலருக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பால் தரம் சோதிக்கும் கருவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் பால்வளம் உச்சத்தை தொட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

newstamil.tv