

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பி.க்களுக்கான பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிதாக மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு பதிவு ஜூன் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தி.மு.க.வை சேர்ந்த எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன், மதிமுக தலைவர் வைகோ, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மற்றும் அதிமுகவை சேர்ந்த என். சந்திரசேகரன் ஆகியோரின் பதவி காலம் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு ஜூன் 19ல் நடைபெறும் என்றும் வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி ஆரம்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.