3
3

2025ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அறிவிப்பு..

இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவரும் பேராசிரியருமான காதர் மொகிதீனுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published on: 

இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவரும் பேராசிரியருமான காதர் மொகிதீனுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணியத்தென்றல் காயிதே மில்லத்தின் காலந்தொட்டே சமூக நல்லிணக்கத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வரும் சிந்தனையாளர் மற்றும் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிய பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

newstamil.tv