உறங்கிய மூதாட்டி, மாயமான 50 பவுன், ஓடும் ரயில் கொள்ளையன்?

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம், தன்னுடன் ரயிலில் பயணித்த மூதாட்டியிடம் சாதுரியமாக திருடிய 50 சவரன் தங்க நகைகளை விற்க சென்ற இடத்தில் போலீசாரிடம் வசமாக சிக்கினார். மினி நகை கடை போல் சுற்றியவர், தனது பிறந்தநாளில் அன்னதானம் வழங்கி நல்லவன் டிராமா போட்டு ஊரை ஏமாற்றிய கதை அதிர வைக்கிறது.
சிக்கிய திருடன்
இன்ஸ்டா பிரபலம் நியூஸ்தமிழ்24x7
Published on: 

ரயிலில் தனியாக...

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் குமாரி என்ற மூதாட்டி தனியாக கடந்த மூன்றாம் தேதி பயணம் செய்திருக்கிறார். கேரள மாநிலம் செங்கனூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த மூதாட்டி, தனது பேத்தியின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த 50 பவுன் தங்கநகைகளை பையில் வைத்திருந்தார்.

ரயில் பயணத்தின் போது தலைமாட்டில் பையை வைத்துக்கொண்டு மூதாட்டி சற்று கண் அசந்த நிலையில், ரயில் பாலக்காடை கடந்துவிட்ட போது கண் விழித்த மூதாட்டிக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி.

இன்ஸ்டா பிரபலம்
சிக்கிய பாலமுருகன்நியூஸ்தமிழ்24x7

சிக்கிய பாலமுருகன்...

தங்க நகைகள் இருந்த பை மாயமானதை அறிந்து மூதாட்டி பதறியதையடுத்து ரயில்வே காவல்துறையினரிடம் புகாரையும் அளித்தார். இது தொடர்பாக ரயில்வே காவல் துறையும், ரயில்வே பாதுகாப்புப் படையும் இணைந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், 600க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சல்லடையாக சலித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

அதில், முக கவசம் அணிந்து கொண்டு கேமராவை கடந்து சென்றவரின் மீது சந்தேகம் எழும்பியதையடுத்து, அவர் கடந்த 11ஆம் தேதி கோவையில் தங்க நகைகளை விற்க முயற்சித்த போது வசமாக போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரை விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

பிறந்த நாள் அமர்க்களம்

இதனிடையே, கடந்த 9ஆம் தேதி தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடிய பாலமுருகன், தனது விரல்களில் பட்டை பட்டையாக மோதிரம், பிரேஸ்லெட், அடுக்கடுக்காக செயின் என மினி நகை கடையை போல் ஜொலி ஜொலித்தார்.

அதன் பின்னர் கோவில்களுக்கு சென்று தனது பெயரில் அர்ச்சனையை செய்துவிட்டு, ஏழை எளிய மற்றும் முதியவர்களுக்கு உணவு பொட்டலத்தை வழங்கி அன்னதான பிரபுவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

தப்பி ஓட்டம்
கைதான பாலமுருகன்நியூஸ்தமிழ்24x7

நுணுக்கமான யுக்தி

அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க சில நுணுக்கமான யுக்திகளையும் கையாண்டு இருக்கிறார். பாலக்காட்டில் ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து ஐந்து பேருந்துகளில் மாறி, மாறி பயணம் செய்து தப்பியிருக்கிறார்.

மேலும் தன்னை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக நெற்றியை கைகளால் மறைத்துக் கொண்டும், வழியிலேயே உடைகளை மாற்றிக் கொண்டு சாதுரியமாக செயல்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவர் மீது ஏற்கெனவே மதுரையில் ஓடும் ரயிலில் கையடக்க மடிக்கணினியை திருடிய வழக்கும் உள்ளது. இந்நிலையில் ஓடும் ரயிலில் கொள்ளையடிப்பதையே வழக்கமாக வைத்துக்கொண்டு பல திருட்டுகளை அரங்கேற்றினாரா? என்பது விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும்.

கைது
ரயில் கொள்ளையன்?நியூஸ்தமிழ்24x7

வீடியோவைக் காண

சிக்கிய திருடன்
இன்ஸ்டா பிரபலத்தின் பித்தலாட்டம் - என்ன நடந்தது?