தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்

அண்ணல் அம்பேத்கர் பெயரிலான அயலக உயர்கல்வி திட்டத்தைக் குழி தோண்டி புதைப்பதாக, தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கம் போல பில் வரவில்லை, மெயில் வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி சுமத்தாமல், கல்வி உதவித்தொகையை விடுவிக்க வலியுறுத்தி உள்ளார்.
கண்டனம்
உதயநிதி ஸ்டாலின்
Published on: 

வன்மையாக கண்டிக்கிறேன்

இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த அரசு.

சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழி தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

உதயநிதி விமர்சனம்
உதவித்தொகை

365 பேர் தேர்வு, 64 பேருக்கு உதவி

இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.

இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர் நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

வழக்கம் போல பில் வரவில்லை, மெயில் வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த டம்மி முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

வீடியோவைக் காண...

கண்டனம்
வன்மையாக கண்டிக்கிறேன் - உதயநிதி