

ஐபோன் 18e:2027-ல் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு புதிய A20 சிப், 6.12 இன்ச் OLED திரை கொண்ட ஐபோன். 24 Mega pixel செல்ஃபி கேமரா இடம்பெறலாம் என தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஐபோன் 18e, 2027-ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் புதிய A20 சிப், 6.12 இன்ச் OLED திரை மற்றும் 24 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறலாம் என தகவல் கசிந்துள்ளது. ஆனால், 120Hz டிஸ்ப்ளே வசதி வழங்கப்படாது என்றும், 60Hz திரையே தொடரும் என்றும் கூறப்படுகிறது.