ஒன்பிளஸ்15 ஸ்மார்ட் போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.