

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக சரிந்து, ஒரு சவரனுக்கு 3,760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் 92,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.470 விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 11,510 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தங்கத்தை போன்று தொடர் இறங்குமுகத்தில் வெள்ளி விலை, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நவம்பர் 17
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றது, ஒரு பவுன் 99,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,470 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 18
ஒரு சவரனுக்கு 2,040 ரூபாய் சரிந்து, 97,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 255 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 185 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 19
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சரிந்தது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நவம்பர் 20
ஒரு சவரனுக்கு 3,760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் 92,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.470 விலை குறைந்து, ஒரு கிராம் 11,510 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை போன்று தொடர் இறங்குமுகத்தில் வெள்ளி விலை, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
நவம்பர் 17 - ரூ.99,760
நவம்பர் 18 - ரூ.97,720
நவம்பர் 19 - ரூ.95,840
நவம்பர் 20 - ரூ.92,080 இன்று