இஸ்தான்புல் நகரின் புறநகர் பகுதியில் உலா வரும் பெண் சிங்கம்

ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை பெண் சிங்கத்தை உயிருடன் பிடிக்க முயற்சி
இஸ்தான்புல்
இஸ்தான்புல்
Published on: 

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் புறநகர் பகுதியில் பெண் சிங்கம் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினர், காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 70-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ட்ரோன்கள் மற்றும் வெப்பக் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் சிங்கத்தை உயிருடன் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.