

குஜராத்தில் இருந்து ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற மாணவரை மிரட்டி வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்து போரில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர் Sahil Mohammad Hussain வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவத்திடம் பிடிபட்ட நிலையில், பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.