ஈரான் வெளியிட்ட AI வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

அமேசான், ஸ்பேஸ் எக்ஸ், மைக்ரோசாப்ட் மீது ட்ரோன் தாக்குதல் இதேபோன்ற அழிவை சந்திக்க நேரிடும் என பகிரங்க மிரட்டல்
ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ்
Published on: 

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படுவது போன்ற AI வீடியோவை ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த நிறுவனங்கள் உதவுவதாகவும், இதற்கு இழப்பீடு வழங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அல்லது இதே போன்ற அழிவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.