Trumph
Trumph

வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறக்கக் கூடாது

வெனிசுலாவிற்கு மேலே உள்ள வான்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள வான்வெளி முழுவதுமாக மூடப்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
Published on: 

வெனிசுலாவின் வான்வெளியை விமான நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்காவில் போதை பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், அந்நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், விமான நிறுவனங்கள், விமானிகள், போதை கடத்தல்காரர்கள் அனைவரும் வெனிசுலாவிற்கு மேலே உள்ள வான்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள வான்வெளி முழுவதுமாக மூடப்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என எக்ஸ் பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv