விண்வெளி கல்விப் பயிற்சி
விண்வெளி கல்விப் பயிற்சி

அமெரிக்காவின் முதல் விண்வெளி கல்விப் பயிற்சி நிறுவனம்

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

யு.எஸ். ஸ்பேஸ் அகாடமி அமைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப், நாட்டின் முதல் விண்வெளி கல்விப் பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். நாசா தலைமையில் உருவாகும் கல்விப் பயிற்சி நிறுவனம், விண்வெளித் துறைக்கான பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரையின் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெனின் பகுதியில் ராணுவ சோதனைகளும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

newstamil.tv