

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா, அம்ரான், சாதா மற்றும் ஹொடைடா ஆகிய மாகாணங்களில் உள்ள 60 முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சவுதி கூட்டணி படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல் மல்கி தெரிவித்துள்ளார்.